Neeya Naana: திருமணம் முடிந்து கணவர் செய்த செயல்- கோபிநாத் கேட்ட கேள்வி
“என்னுடைய கணவர் எங்களுக்கு திருமணம் நடந்ததை கூட மறந்து விட்டார், திருமணம் முடிந்து அடுத்த நாள் செய்த விடயம் அதிர்ச்சியாக இருந்தது..” என நீயாநானாவில் பெண்ணொருவர் பேசியது இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் வாரம் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் நீயா நானா.
நீயா? நானா? என்றால் இது ஒரு விவாத நிகழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது.
தொகுப்பாளர் கோபிநாத் நெடுங்காலமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில், நீயா நானாவில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறும். இவ்வாறு நீயாநானாவில் வாதிடப்படும் சில தலைப்புகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பும்.
கோபிநாத்தையே அதிர்ச்சியடைய வைத்த பெண்
இந்த நிலையில் இந்த வாரம் திருமணத்திற்கு பின்னர் தம்பதிகள் ஞாபகத்தில் வைத்திருக்கும் விடயங்கள் குடும்ப வாழ்க்கையில் என்ன வகையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என வாதிடப்பட்டது.
அதில், பெண்ணொருவர் பேசியது கோபிநாத்திற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அதாவது, “என்னுடைய கணவர் எங்களது திருமணம் முடிந்து வேலைக்கு கிளம்பிய விட்டார். ஆனால் வேலை முடிந்தவுடன் எங்களது வீட்டிற்கு வராமல் அவர் முன்னர் இருந்த வீட்டிற்கு சென்று உறங்கி விட்டார்...” எனக் கூறினார்.
இதனை கேட்டுக் கொண்டிருந்த கணவரும் ஆமாம் என தலையாட்ட கோபிநாத்திற்கு ஒரு கேள்வி வந்தது, “வீட்டை மறந்து வீட்டீர்கள் சரி, எப்படி திருமணமான மனைவியை மறந்தீர்கள்?” எனக் கேட்கிறார்.
இப்படி கணவன்- மனைவி இருவரும் கடந்த கால நினைவுகளை வைத்துக் கொண்டு எப்படி தற்போது இருக்கும் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள் இந்த வார எபிசோட்களில் விளக்கமாக பார்க்கலாம்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |