பொடலங்கா நீ மட்டும் தான் இந்தியனா? நீயா நானாவில் வெடிக்கும் கலவரம்- நடுவில் சிக்கிய கோபிநாத்!
“ பொடலங்கா நீ மட்டும் தான் இந்தியனா?” என நீயாநானாவில் போட்டியாளர் ஒருவர் பேசிய காட்சிகள் அரங்கத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் இருந்து வருகின்றார்.
பல வருடங்கள் கடந்த நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத் அளவிற்கு யாரும் தொகுத்து வழங்காத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி மவுசு எழுந்துள்ளது.
வெடிக்கும் சண்டைகள்
இந்த நிலையில், இந்த வாரம் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல போவது உறுதி, அதற்கு வாய்ப்பில்லை என இரண்டு அணிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த அணியில் தலைவர்கள் இருவர் தெரிவு செய்து கோபிநாத்திற்கு பக்கத்தில் அமர வைக்கபட்டுள்ளது.
அதில் ஒரு அணியுள்ளவர், இந்தியர்களை பற்றி பெறுமையாக பேசிக் கொண்டிருந்தார். கடுப்பான எதிரணியில் உள்ளவர், “ பொடலங்கா நீ மட்டும் தான் இந்தியனா?” என கத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து அரங்கத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எப்படி சமாளிப்பது என தெரியாமல் இடையில் கோபிநாத் தடுமாறிக் கொண்டு நிற்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |