Neeya naana:-அரங்கில் கேள்விகளை அடுக்கிய மனைவிகள்- பதில் கூற முடியாமல் திணறும் கணவர்கள்
மனைவிமார்களை ஒரு சில வார்த்தைகளால் காயப்படுத்தும் கணவர்மார்களுக்கு நீயா நானாவில் கோபிநாத் தரமான பதிலடிக் கொடுத்துள்ளார்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் இருந்து வருகின்றார்.
பல வருடங்கள் கடந்த நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத் அளவிற்கு யாரும் தொகுத்து வழங்காத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி மவுசு எழுந்துள்ளது.
வெளுத்து வாங்கிய கோபிநாத்
இந்த நிலையில், இந்த வாரம் ஒரு சில கடுமையான வார்த்தைகளால் மனைவிமாரை காயப்படுத்தும் கணவர்கள், எதிர்த்து கேள்வி கேட்கும் மனைவிமார் என இரு தரப்பினர் வாதிடவுள்ளனர்.
வீட்டில் செய்யும் ஒரு சில தவறுகளை மனதில் வைத்து கொண்டு மனைவி என்ன செய்தாலும் அதற்கு காரணம் அப்போது செய்த தவறு தான் சில கணவர்கள் சுட்டிக்காட்டி கொண்டே இருப்பார்கள்.
இதனால் வீடுகளில் சண்டை, பிள்ளைகளுக்கு பிரச்சினை, நிம்மதியின்மை, மனநிலை பாதிப்பு இப்படியான பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை தடுக்கும் விதமாக கோபிநாத் இந்த வாரம் வாதிடவுள்ள நீயா நானா சுவாரஸ்யமாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
அதில், “ எனக்கு மாதவிடாய் காலங்கள் வழியோ, வெறுப்பு இப்படி எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் என்னுடைய கணவர் குழந்தையிடம், “அம்மா இனி 3 நாட்களுக்கு கத்த ஆரம்பித்து விடுவார். ஆகையால் இனி கொஞ்சம் கவனமாக இரு” என்பார் இப்படி என்னுடய கணவர் கூறுவதால் நானே அப்படி தானா? என நம்ப ஆரம்பித்து விடுவேன்.” என அழுதப்படி பேசியிருக்கிறார்.
இந்த முறைப்பாட்டிற்கு கணவர் என்ன பதில் கொடுக்க போகிறார் என்பதனை பொருத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |