நீயா நானா: குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாத தம்பதிகள்- Dink lifestyle-ஐ விளாசும் தாய்மார்கள்.. பதிலை பாருங்க
Dink lifestyle என்ற முறையில் தம்பதிகள் செய்யும் அலப்பறைகளை கோபிநாத் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் வாரம் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் நீயா நானா.
நீயா? நானா? என்றால் இது ஒரு விவாத நிகழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது.
தொகுப்பாளர் கோபிநாத் நெடுங்காலமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில், நீயா நானாவில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறும். இவ்வாறு நீயாநானாவில் வாதிடப்படும் சில தலைப்புகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பும்.
Dink lifestyle-ஐ கழுவி ஊற்றும் தாய்மார்கள்
இந்த நிலையில் இந்த வாரம், Dink lifestyle-ஐ விரும்பும் தம்பதிகள் அதனை எதிர்க்கும் தாய்மார்கள் என இரண்டு குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்காக திருமணம் ஆகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் குறிப்பிட்ட சில தம்பதிகள் வாழ்ந்து வருகிறார்கள்.
குழந்தை பெற்றுக் கொண்டால் அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் போய் விடும் என அவர்கள் பயம் கொள்வதாகவும் கூறியுள்ளனர். இதற்கு Dink lifestyle என்ற பெயரையும் வைத்து அது நவீன சமூகத்திற்கு உள்ள பேஷன் என கூறி வருகிறார்கள்.
இதனை எதிர்க்கும் தாய்மார்கள், குழந்தை பிறந்தது முதல் வளரும் வரை அவர்கள் செய்யும் குறும்புகளையும், அவர்களின் கனவுகள் குறித்தும் வெளிப்படையாக பேசுகிறார்கள்.
இருதரப்பு வாதமும் சூடுபிடித்துள்ளதால் தொகுப்பாளர் கோபிநாத் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். தமிழர்களின் பண்பாட்டை அழிக்கும் இதுபோன்ற கலாச்சாரத்தை கண்டு இணையவாசிகள் மிரண்டு போயுள்ளனர்.
குழந்தைகள் பெற்றால் தான் ஒரு பெண் முழுமையடைகிறாள் என்ற கருத்திற்கு இந்த வாரம் நீயா நானாவில் இடம் இல்லை என்பது ப்ரோமோக்கள் வாயிலாக உறுதியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |