மாசம் 25 லட்சம் சம்பளம்...மனைவியா வர்றியான்னு கேட்ட தொழிலதிபர்! கதறி அழுத நடிகை
சினிமா வாய்ப்பு இல்லாததால் 25 லட்சத்துக்கு மனைவியாக தொழிலதிபர் ஒருவர் அழைத்ததாக நடிகை நீது சந்திரா கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழில் மாதவன் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘யாவரும் நலம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நீது சந்திரா.
இதுவரை இவர் எந்த ஒரு முன்னணி நடிகரின் படத்திலும் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்படியே பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இறுதியாக தமிழில் சூர்யா நடித்த ‘சிங்கம் 3’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நீது சந்திரா நடனம் ஆடியிருந்தார்.
பின் பட வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரைக்கு சென்று விட்டார்.
இது குறித்து அண்மையில் பேசியுள்ளார். அதாவது, 2005ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான நான் தேசிய விருது வாங்கிய 12க்கும் அதிகமான நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன்.
ஆனால், இன்றைக்கு எனக்கு வேலை இல்லை. இதனால் பெரிய தொழிலதிபர் ஒருவர் என்னிடம் மாதம் 25 லட்சத்தில் சம்பள மனைவியாக இருக்க முடியுமா? என்று கேட்டார்.
அவர் அப்படிக் கேட்டது எனக்குப் பெரும் அதிர்ச்சி அளித்தது. இப்போது என்னிடம் பணமே? வேலையோ? இல்லை. மிகவும் கவலையாக உள்ளேன் என்று குறிப்பிட்டு அதிர விட்டுள்ளார்.
தற்கொலை முயற்சி செய்த நீது சந்திரா
இத்தனை படங்களில் நடித்த பிறகும் நான் இங்கு வேண்டப்படாதவளாக மாறிவிட்டேன். அதோடு முன்னணி இயக்குனர் ஒருவர் என்னை பட ஒத்திகைக்கு அழைத்து இருந்தார்.
ஒத்திகை முடிந்து ஒரு மணி நேரத்தில் என்னை நிராகரித்து விட்டார். அதேபோல் ஹாலிவுட்டில் நான் நுழைந்ததை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதோடு அவர்களால் நம்ப முடியவில்லை. இதற்கு முன்பு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கூட பலமுறை எனது மனதில் வந்து சென்றது என்று மனவேதனையில் கண்கலங்கிய படி நீது சந்திரா கூறி இருக்கிறார்.