மின்னல் வேகத்தில் எடையை கட்டுப்படுத்தும் கசப்பு பானம்... நொடியில் தயாரிக்கலாம்!
வேம்பு இலை உடலுக்கு பல வித நன்மைகளை பயக்கும் ஒரு பொருளாகும்.
குறிப்பாக, சருமத்திற்கு வேம்பினால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்.
எடையை வேகமாக குறைக்க விரும்பினால் வாரத்திற்கு 2 முறை வேம்பு இலை சாற்றினை குடியுங்கள்.
நீரிழிவு நோயாளிகள் இந்த இனிப்பான பழங்களை சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ
எடை எப்படி கட்டுப்படுத்தப்படும்?
எடையைக் கட்டுப்படுத்த வேப்பஞ்சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மிகச் சிலரே அறிந்திருப்பார்கள்.
அதன் நுகர்வு செரிமானத்தை மேம்படுத்துகிறது.
இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
இது உங்கள் உடல் கலோரிகளை வேகமாக எரிக்கிறது. இதனால் உங்கள் எடையை மிக வேகமாக குறைக்க முடியும்.
கைக்குழந்தையுடன் பிக்பாஸ் கவின் வெளிவிட்ட புகைப்படம்! குவியும் லைக்ஸ்
நீரிழிவு நோயாளிக்கு மருந்தாகும்
வேப்பிலையில் உள்ள கசப்பு தன்மை, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு ஆற்றுகிறது.
இவற்றில் உள்ள நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும், மாவுச்சத்தை குளுக்கோஸாக உடைத்து இரத்த சர்க்கரை உடனே அதிகரிக்காமல் இருப்பதில் இருந்தும் தடுக்கிறது.
வேம்பு இலை பானம்
முதல் ரெசிபி
3 டம்ளர் நீரில், 5 வேப்பிலைகளைப் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
பின் அது குளிர்ந்த பின் வடிகட்டி, அதில் தேன் சிறிது கலந்து உடனே குடிக்க வேண்டும்.
இரண்டாம் ரெசிபி
3 டம்ளர் நீரில் 7 வேப்பிலைகளைப் போட்டு, 1 டம்ளர் நீர் ஆகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
பின் அதனை வடிகட்டி, அந்நீரை காலை, மதியம் மற்றும் மாலையில் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு
வேப்ப இலைகளில் நிம்பின், நிமாண்டியல் போன்ற 130க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான உயிரியல் சேர்மங்கள் உள்ளன. அவை உடலை குணப்படுத்தவும் ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவுகின்றன.
தினமும் இரண்டு இலைகளை பச்சையாக மென்று சாப்பிட்டாலும் முழு பலன்களையும் பெற்று கொள்ள முடியும்.