செல்பி மூலம் பிரபலமான கொரில்லா: பாதுகாவலர் தோளில் சாய்ந்து உயிரைவிட்ட சோகம்! கலங்க வைக்கும் புகைப்படம்
செல்பி மூலமாக உலகப் புகழ்பெற்ற நடாகாஷி மற்றும் மடாபிஷி என்ற இரண்டு கொரில்லாவில் தற்போது நடாகாஷி என்ற கொரில்லா தனது பாதுகாவலர் மடியிலேயே உயிரிழந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி சோகத்தினை ஏற்படுததியுள்ளது.
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள விருங்கா உயிரியல் பூங்காவில் நடாகாஷி மற்றும் மடாபிஷி ஆகிய இரண்டு கொரில்லாக்கள் பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த கொரில்லாக்களின் பெற்றோர் வன விலங்குகளை வேட்டையாடுபவர்களால் கொல்லப்பட்ட நிலையில், இந்த இரண்டும் உயிரியல் பூங்காவில் வைத்து வளர்க்கப்பட்டது.
கடந்த 2019ம் ஆண்டு, இப்பூங்காவின் ஊழியரான மேத்யூ ஷவாமு இரு கொரில்லாக்களுடன் செல்பி எடுத்து, சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு, இணையத்தில் வைரலாகியதுடன், இந்த இரண்டு கொரில்லாக்களும் உலகப் புகழ்பெற்றது.
இந்நிலையில், நடாகாஷி கொரில்லா கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்ட நிலையில், தற்போது தனது பாதுகாவலர் ஆண்ட்ரே பவுமா என்பவரின் தோளில் சாய்ந்தபடியே உயிரைவிட்டுள்ளது.
குறித்த பெண் கொரில்லாவினை குழந்தை போல பார்த்து வந்த பாதுகாவலர் தற்போது பெரும் சோகத்தில் இருப்பதுடன், இதனை மிகப்பெரிய இழப்பாக கண்கலங்கி வருகின்றார்.

