திருமணத்திற்கு பின் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா - கோவிலில் இப்படியா செய்யணும்!
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் நேற்று ஜூன் 9 ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாய் நடைபெற்றது.
இந்த திருமணம் முடிந்த கையோடு இன்று திருப்பதிக்கு வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் எழுமலையானை தரிசனம் செய்தனர்.

பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த புதுமண ஜோடிகள், போட்டோஷூட் நடத்தியதாக தெரிகிறது. அப்போது நயன்தாரா செருப்பு காலுடன் இருந்ததும், அது புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

பொதுவாக கோயிலில் செருப்பு அணிய தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் நயன்தாரா காலணியுடன் சென்று போஸ்ட் வெட்டிங் ஷூட்டில் கலந்து கொண்டார்.
இந்த சம்பவம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள தேவஸ்தானம், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.