குழந்தைகளை பிரிந்து வெளிநாட்டில் தவித்த விக்கி நயன் ஜோடி... வெளியான க்யூட் புகைப்படங்கள்
நடிகை நயன்தாரா தனது இரட்டை குழந்தைகளுடன் வெளியிட்டுள்ள தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நயன் விக்கி ஜோடிகள்
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகள் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் கடந்த 2022ம் ஆண்டு பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது.
இந்த தம்பதிகள்களுக்கு உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர். அவ்வப்போது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தினையும் வெளியிட்டு வருகின்றனர்.
நயன்தாரா தனது கணவருடன் சமீபத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் என்று சென்றிருந்த நிலையில், அங்கு ’லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்துள்ளார்.
மகன்களை பிரிந்த பாசம்
இந்நிலையில் வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள இந்த தம்பதிகள் தங்கள் மகன்களை மடியில் வைத்திருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்கள்.
விக்னேஷ் பதிவிட்டுள்ள இந்த பதிவில், விக்னேஷ் மற்றும் நயன்தாரா மடியில் குழந்தைகள் அழகாக இருப்பதும், விளையாடும் தெரிகின்றது.
மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக, ‘சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பினை முடித்து எங்கள் உயிர் மற்றும் உலகத்தை பார்ப்பதற்கு வீடு திரும்பியுள்ளேன்...
குறித்த படப்பிடிப்பின் மறக்கமுடியாத நினைவுகளுடன் தங்களது குழந்தைகளின் நினைவும் சேர்ந்துள்ளது... இனி சிறிது நாட்கள் அவர்களுடன் தான் இருக்கப் போகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |