கணவனின் பாடலுக்கே ரீல்ஸ் செய்து காதலர் தினம் கொண்டாடிய நயன்...
நடிகை நயன்தாரா காதல் கணவன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து காதலர் தினத்தில் பாடிய பாடல் காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நயன்தாரா
தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருகின்றார்.
பாலிவுட்டில் நயன்தாரா அறிமுகமாக ஜவான் திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததுடன் 1000 கோடிக்கு மேல் வசூல் வெறியாட்டம் ஆடியது.
அதன் பின்னர் நயன் ஒரு படத்து்க்கு 12 கோயில் இருந்து 15 கோடிகள் வரை சம்பளம் பெறுகின்றார்.
சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.
இந்நிலையில் காதலர் தினத்தில் நயன்தாரா கணவனின் வரிகளில் வெளியான பாடலை காதல் பொங்க அவருடன் இணைந்து பாடும் காணொளி தற்போது இணையத்தில் வாழ்த்துக்களையும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |