காதலர் தினத்தில் நயன்தாரா விக்னேஷ் வெளியிட்ட பதிவு... வைரல் புகைப்படம் இதோ
நடிகை நயன்தாரா விக்னேஷ் ஜோடிகள் தனது இரண்டு மகன்களுடன் காதலர் தின பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
நடிகை நயன்தாரா விக்னேஷ் ஜோடி
கேரளாவைச் சேர்ந்த இவர் 1984ம் ஆண்டு பிறந்தார். டயானா மரியம் குரியன் என்பது தான் இவரது பெயர். கல்லூரி படிக்கும் போதே பகுதி நேர மாடலிங் மற்றும் விளம்பர துறையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள படம் மூலம் சினிமாவில் நுழைந்த இவர் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நயன்தாரா நடித்த போது, இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், தற்போது 10 ஆண்டுகளை கடந்துள்ளதாக பதிவிட்டுள்ளனர்.
இந்த காதல் ஜோடிகள் சில ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துள்ள நிலையில், உயிர் உலகம் என்ற இரண்டு மகன்களுக்கு பெற்றோராகியுள்ளனர்.
காதலர் தின பதிவு
தற்போது விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் காதலிக்கும் ஒவ்வொரு நபர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ள விக்னேஷ் சிவன் ’என் தங்கத்துடன் ஒரு சகாப்தத்தை முடித்து விட்டேன், நீ என் உயிராகவும், நான் என் உலகமாகவும் இருந்த நிலையில் தற்போது நமக்கு உயிர் மற்றும் உலகம் கிடைத்துள்ளது’.
’நாம் முதுமையிலும் இனிவரும் பிறவியிலும் நீண்ட தூரம் பயணம் செய்யப் போகிறோம், உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்’ என்று குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் அவர் பதிவு செய்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |