நயன்தாரா- விக்னேஷ் சிவன் உறவில் விரிசல்? ஜோதிடர் சொன்ன அந்த விஷயம் என்ன?
பிரபல நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா- விக்னேஷ் சிவன் வாழ்வில் மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நானும் ரௌடி தான் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பணியாற்றிய போது நயன்தாராவுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.
சுமார் ஏழு ஆண்டுகள் காதலித்த பின்னர், இருவரும் கடந்த ஜூன் 9ம் தேதி மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு வெளிநாடுகளில் தேனிலவு கொண்டாட்டம் என இருவரும் பிஸியாகிவிட்டனர்.
தொடர்ந்து சில மாதங்களிலேயே இரட்டை ஆண் குழந்தைக்கு பெற்றோராகி இருப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தனர்.
இதில் சர்ச்சைகள் எழ, ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்து விட்டதாக கூறி முற்றுப்புள்ளி வைத்தனர்.
இதனையடுத்து இருவரும் அவர்களுடைய பணியில் ஈடுபட தொடங்கிய போதும், AK62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.
நயன்தாரா தரப்பில் எவ்வளவோ பேசியும் சமாதானம் நடக்கவில்லை என தெரிகிறது, நயன்தாராவின் கெரியரிலும் தற்போதைய சூழலில் ஹிட் கொடுக்கவில்லை.
ஏன் இவ்வாறு தொடர்ந்து பிரச்சனைகள் வருகின்றன என ஜோசியரிடம் கலந்து ஆலோசித்த போது, இருவரின் திருமணம் நடந்த நேரம் சரியில்லை என அவர் கூறியதாக தெரிகிறது.
இதனால் இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்படுகிறது.
திருமணம் முடிந்த போதே, குளிகை நேரத்தில் திருமணம் நடந்ததாக தகவல்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.