அளவான மேக்கப்பில் செம்ம கியூட்டாக நயன்தாரா! அடுத்தடுத்து வெளியான ரொமான்ஸ் புகைப்படங்கள்
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோக்கள் இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.
நயன் விக்கி
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 7 ஆண்டுகள் காதலுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
பின்பு திருப்பதி கோவிலுக்கு சென்று சர்ச்சையில் சிக்கிய நிலையில், தொடர்ந்து தாய்லாந்துக்கு சென்று தனது ஹனிமூனைக் கொண்டாடினர்.
ஹனிமூன் முடிந்து இந்தியா திரும்பிய இந்த ஜோடிகள் தங்களது வேலையில் பயங்கர பிஸியாக இருந்து வந்தனர்.
இரண்டாவது ஹனிமூன்
இந்நிலையில் கடந்த வாரம் இருவரும் ஸ்பெயினுக்கு இரண்டாவது ஹனிமூன் புறப்பட்டனர். தற்போது பார்சிலோனாவில் கொண்டாட்டத்தில் உள்ள நிலையில் தங்களின் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் விக்னேஷ் சிவன்.
அந்த வகையில் பார்சிலோனா தெரு வீதிகளிலும் சந்துக்களிலும் விக்கியும் நயனும் டூயட் ஆடுவது போலவும் வித விதமாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். இதில் தொடை தெரிய குட்டி கவுன் அணிந்துள்ளார். தற்போது இந்த ரொமான்ஸ் போட்டோக்கள் இணையத்தை ரணகளப்படுத்தி வருகிறது.