ஹனிமூனுக்கும் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத விக்கி- நயன் ஜோடி! தீயாய் பரவும் புது தகவல்
ஹனிமூன் கொண்டாடத்திற்கு வெளிநாடு சென்றுள்ள விக்கி - நயன் ஜோடி ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வில்லை என்ற புது தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணத்தின் வீடியோ உரிமையை பல கோடி ரூபாய் கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது.
அதனால் திருமணத்திற்கு வந்திருந்த நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வீடியோ அல்லது புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதனால் அவர்களது திருமண புகைப்படங்கள் எதுவும் லீக்காகவில்லை. திருமணத்திற்கான மொத்த செலவையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் செய்ததாக கூறப்பட்டது.
ஹனிமூனுக்காக செலவு செய்த நெட்பிளிக்ஸ் நிறுவனம்
தற்போது ஹனிமூன் கொண்டாட வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் விக்கி - நயன் ஜோடி பற்றி மேலும் ஒரு புதுத்தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி அவர்கள் இருவரும் தற்போது சென்றிருக்கும் இரண்டாவது ஹனிமூனுக்கான முழு செலவையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் ஏற்றுள்ளதாம்.

திருமணத்தைப் போல் ஹனிமூனுக்கும் அவர்கள் ஒரு ரூபாய் கூட செலவழிக்க வில்லை என்று கூறப்படுகிறது. ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள விக்கி - நயன் ஜோடி செல்லும் இடமெல்லாம் ஒரு புகைப்படக் கலைஞரையும் அழைத்துச் சென்று விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார்களாம்.
இதையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் ஏற்பாடு செய்துகொடுத்ததாகவும், விரைவில் தங்கள் தளத்தில் வெளியாக இருக்கும் அத்தம்பதியின் திருமண வீடியோவில் திருமணத்தையும் தாண்டி பல சர்ப்ரைஸ் வீடியோக்களையும் வெளியிடுவதற்காகவே அந்நிறுவனம் இவ்வாறு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.