நயன்தாரா விக்னேஷ் திருமணம்! நெட்பிளிக்ஸ் வெளியிட்ட முதல் ப்ரொமோ
நெட்ஃப்ளிக்ஸில் ஒளிபரப்பாகவிருக்கும் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண வீடியோவின் ப்ரோமோ தற்போது வெளியகியுள்ளது.
நடிகை நயன்தாரா விக்னேஷ்
தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகின்றார்.
நானும் ரவுடி தான் படத்தில் பணிபுரிந்த போது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கு நட்பு ஏற்பட்டு, பின்பு இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த ஜுன் மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, ஜோதிகா, விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர்கள் மணிரத்னம், அட்லி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

நெட்பிளிக்ஸ் வெளியிட்ட ப்ரொமோ
இதையடுத்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வுகள் முதல் சீசனாக விரைவில் Netflix தளத்தில் வெளியாக உள்ளன. அதற்கான புதிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில் பேசும் நயன்தாரா, “நான் வேலை செய்வதை நம்புகிறேன். உங்களை சுற்றி நிறைய அன்பு இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்வது உண்மையிலேயே சிறப்பானது” என்கிறார்.
தொடர்ந்து பேசும் விக்னேஷ் சிவன், “அவரது குணநலன்கள் மீது காதல் கொள்கிறேன், உட்புறமும், வெளிப்புறமும் அவர் ரொம்ப அழகானவர்” என்று கூறியள்ளார்.
[M57XJQ