காதலர் நெஞ்சில் சாய்ந்தபடி நயன்தாரா: வெளியிட்ட காணொளியால் குஷியில் ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் ரொமாண்டிக் காதலர்களாக வலம் வரும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தீபாவளியை ஒன்றாக நின்று கொண்டாடிய காட்சியினை வெளியிட்டுள்ளனர்.
நட்சத்திர ஜோடிகளான இவர்கள் 6 வருடமாக காதலித்து வரும் நிலையில், இடையில் இருவருக்கும் மனக்கசப்பு என்று கூறப்பட்டது. அதன் பின்பு இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஏகப்பட்ட ரசிகர்களின் பட்டாளத்தை வைத்திருக்கும் நயன்தாராவின் சிறிய சிறிய செயலும் கூட ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகின்றது.
இந்நிலையில் தனது காதலர் விக்கியுடன் தீபாவளி பண்டியை கொண்டாடிய நயன்தாரா அக்காட்சியினை விக்னேஷ் தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
வான வேடிக்கை பின்னால் தெரிய, நயன்தாரா விக்னேஷ் சிவன் நெஞ்சில் சாய்ந்தபடி செம்ம கியூட் லுக்கில் ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
மேலும், உலகெங்கிலும் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். மகிழ்ச்சியாக இருப்பது ஒரு பயிற்சி! எனவே தயவுசெய்து தினமும் அதை பயிற்சி செய்யுங்கள் ஆம். கவலைகள் அனைத்தும் பட்டாசுகள் போல வெடிக்கப்பட வேண்டும், பின்னர் ஏற்படும் ஒளியை நாம் பார்க்க விருப்பப்பட வேண்டும்.
அதற்கான ஒரே வழி... எதுவாக இருந்தாலும் நமது இலக்குகளை நோக்கி விடாமுயற்சியுடன் இருப்பதே...! மகிழ்ச்சியாக இருக்க மறக்காதீர்கள்! வாழ்க்கையில் கொண்டாடுவதற்கும் மகிழ்வதற்கும் நிறைய இருக்கிறது என்பதை இந்த பண்டிகைகள் நமக்கு ஒவ்வொரு முறையும் நமக்கு நினைவூட்டுகின்றன.
வழக்கமான வேலைகளில் இருந்து சிறிது நேரம் ஒதுக்கி, வாழ்வில் உள்ள நல்ல விஷயங்களைப் பார்த்து மகிழ்ச்சியாக இருங்கள்! மிகவும் பாசிட்டிவாக தீபாவளியை கொண்டாடுங்கள் என கூறியுள்ளதோடு, இவர் பதிவிட்ட வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.