உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நயன்தாரா, விக்கி ஜோடி: வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க
கூழாங்கல் திரைப்படத்திற்கு கிடைத்த முதல் சர்வதேச விருதுடன் அதன் தயாரிப்பாளர்களான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா உள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கியுள்ளனர். இதன்மூலம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூழாங்கல்.
இத்திரைப்படம் பல்வேறு சர்வதேச விருது விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்நிலையில் ரோட்டர்டாமில் நடைபெற்ற சர்வதேச சினிமா விழாவிலும் போட்டியிட்ட கூழாங்கல் டைகர் விருது பெற்றுள்ளது.
இந்த மகிழ்ச்சியான செய்தியை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டம் தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவில் நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் கையில் டைகர் விருது வைத்துள்ளார். இவர்கள் அருகில் உள்ள சிறிய பலகையில் GOOD VIBES ONLY என்று குறிப்பிட்டுள்ளது.