நயன்தாரா தங்கிய ஓட்டல் முன் பரபரப்பு.... அலை போல திரண்ட ரசிகர்கள் கூட்டம்! லீக்கான வீடியோ
காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழுவினர் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக தற்போது பாண்டிச்சேரி வந்துள்ளனர்.
இந்த நிலையில் நயன்தாராவை பார்க்க அவர் தங்கியுள்ள ஓட்டல் முன் ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
சுமார் ஒருவார காலம் அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாராவை காண அவரது ரசிகர்கள், நயன்தாரா தங்கி இருக்கும் தயார் சொகுசு ஓட்டல் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
படப்பிடிப்புக்காக வெளியே வந்த நயன்தாரா, ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி காரில் ஏறி சென்றார். மேலும் காரின் உள்ளே இருந்து கொண்டு, ரசிகர்களுக்கு வணக்கம் கூறினார்.
இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது
Thalaivi shooting in pondicherry#LadySuperstar #Nayanthara pic.twitter.com/zJ2p0NLabY
— Nayanthara Fans Club (NFKWA) (@NayantharaU_FC) August 21, 2021