கொந்தளிக்கும் மருத்துவ சங்கம்- போட்ட போடில் போஸ்ட்டை டெலீட் செய்த நயன்தாரா
நடிகை நயன்தாரா செம்பருத்தி டீ தொடர்பாக பதிவிட்டு இணையவாசிகள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்றுக் கொண்டார்.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் டாப்பில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா.
இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சினிமாவிற்குள் வந்த ஆரம்ப காலங்களில் சில பிரபலங்களுடன் சர்ச்சையில் சிக்கினாலும் தற்போது குடும்பம், குழந்தை என சந்தோசமானதொரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இவரின் வெற்றிக்கு எப்போதும் தன்னுடைய கணவர் தான் காரணம் என மேடைகளில் மகிழ்ச்சியாக கூறியும் வருகிறார்.
பதறிப் போய் போஸ்ட்டை டெலிட் செய்த நயன்
இந்த நிலையில் சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்பருத்தி டீயில் பலன்களை பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு அவரின் ரசிகர்கள் நேர்மறையான கருத்துக்களையும், எதிர்மறையான கருத்துக்களையும் பதிவிட்டு வந்தனர்.
இப்படியொரு சமயத்தில் செம்பருத்தி டீ குடிப்பதால் சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் ஆண்களின் விதைப்பை பாதிப்பு போன்ற நோய்கள் வரும் என மருத்துவர் எக்ஸ் தளத்தில் விமர்சித்திருந்தார்.
இதனால் சமூக வலைத்தளங்களில் அதிகமான வாதங்களும் எழுந்தன.
வாயு சர்ச்சையில் சிக்கிய சமந்தா அவரது போஸ்ட்டை டெலிட் செய்த வேளையில், நயன்தாராவும் செம்பருத்தி டீ சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.
இந்த செய்தி ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |