தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்... வினேஷ் போகத்துக்கு ஆதரவாக நடிகை நயன்தாரா போட்ட பதிவு!
ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து வினேஷ் போகத்துக்கு நடிகை நயன்தாரா ஆறுதல் கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைராகி வருகின்றது.
வினேஷ் போகத்
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய நாட்டை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டார்.
இவர் மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றார். வினேஷ் போகத் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவரது உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்தமை காரணமாக போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
குறித்த விடயம் இந்தியர்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தியது. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து வினேஷ் போகத் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
வினேஷ் போகத்திற்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினேஷ் போகத்தை ஆதரித்து பெதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் நீங்கள் பலரை ஊக்குவிக்கிறீர்கள், உங்கள் மதிப்பை வெற்றிகளால் அளவிடப்பட முடியாது. வெற்றியை தாண்டி நீங்கள் ஒரு பெரிய பரிசைப் பெற்றுள்ளீர்கள், அது எந்த சாதனையையும் மிஞ்சும் ஆழமான அன்பு. இனி நீங்கள் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என பதிவிட்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |