நயன்தாரா கணவர் கொடுத்த சர்ப்ரைஸ் எப்படி தெரியுமா? வீடியோ போட்டு மகிழ்ந்த லேடி சூப்பர் ஸ்டார்
நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் எப்படி பிறந்த நாள் பரிசு கொடுத்தார் என்ற காட்சியை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் தான் நயன்தாரா.
இவர் கடந்த வருடம் இயக்குநர் விக்னேஷ் சிவனை 7 வருடங்களுக்கு மேல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது அழகிய இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.
குடும்பம், குழந்தை, சினிமா, வியாபாரம் என பிஸியாக இருந்து வரும் நயன்தாரா டுவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் சர்ப்ரைஸ் குறித்தான ஒரு வீடியோக்காட்சி பகிர்ந்துள்ளார்.
அதாவது கடந்த மாதம் நவம்பர் 18ம் திகதி நடிகை நயன்தாரா தன்னுடைய 39 ஆவது வருட பிறந்தநாளை கணவர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார்.
சர்ப்ரைஸ் காட்சி
வருஷா வருஷம் வெளிநாடுகளுக்கு சென்று கணவனும் மனைவியும் மாறி மாறி பிறந்தநாளை கொண்டாடி வந்த நிலையில், இந்த ஆண்டு சென்னையிலேயே நண்பர்களுடன் கொண்டாடியுள்ளனர்.
பிறந்த நாளுக்காக நயன்தாராவின் கணவர் அவருடைய கனவு காரை ( மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் Maybach கார் மாடல்) சுமார் 3 கோடிக்கு வாங்கி கொடுத்துள்ளார்.
பரிசு வழங்கும் பார்ட்டியில் பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டியிருந்தனர். அத்துடன் வான வேடிக்கைகள் வெடித்து பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட காட்சியை நயன்தாரா அவரின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு கணவர் குறித்து நெகிழ்ந்துள்ளார். குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அத்துடன், “ இப்படியான கணவர் கிடைத்தால் சொர்க்கம் தான்..” என பெண் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
All about A Month Back?? #MAYBACH ?? pic.twitter.com/tmcsTWWzI5
— Nayanthara✨ (@NayantharaU) December 17, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |