இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு.. ஒரு நிமிஷ விளம்பரத்துக்கு கோடிகளில் அள்ளும் நயன்தாரா!
ஒரு நிமிட விளம்பரத்துக்கு நயன்தாரா கோடிகளில் சம்பளம் வாங்குவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார்
தமிழ் சினிமாவில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்துடன் இருந்து வரும் நடிகை தான் நயன்தாரா.
இவர் கோலிவுட்டை பொருத்த வரையில் நிறைய படங்கள் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த வருடம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அழகிய இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவர்களின் மற்ற வியாபாரங்களிலும் அதீத கவனம் செலுத்தி வருகிறார்கள்.
கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்
அந்த வகையில், படங்களில் நடிப்பதற்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாரா தற்போது சொந்தமாக ஒரு தனி விமானத்தை வாங்கியுள்ளாராம். இதன் பெறுமதி 25 லட்ச ரூபாய் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் 50 விநாடி விளம்பரத்துக்கு 5 கோடி ரூபாயை சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
“ ஒரு விளம்பரத்துக்கே இவ்வளவு தொகையா? நாங்க மட்டும் என்ன தொக்கா” என மற்ற நடிகைகளும் கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |