சர்ச்சைகளுக்கு மத்தியில் நயன்தாரா கொடுத்த மற்றுமொரு அப்டேட்- எதிர்ப்பு கிளம்புமா?
நடிகை நயன்தாரா திருமண ஆவணப் படம் விவகாரம் தொடர்பாக, நெட்ஃபிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தனுஷ்- நயன்தாரா
பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பரில் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிகளின் திருமண காட்சிகள் வெளியானது.
அதற்கு முன்னராக இந்த ஆவணப்படத்தின் ட்ரைலர் வெளியானது. அதில், நானும் ரௌடி தான் படத்தின் மூன்று நிமிட படப்பிடிப்பு காட்சிகள் இருந்தது. இதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ரூ.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதனை தொடர்ந்து தனுஷ் அனுப்பிய அந்த நோட்டீஸுக்கு எதிர்வினையாக நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தனுஷை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
மேலும் அவரது கணவர் விக்னேஷ் சிவன், அந்த மூன்று நிமிட படப்பிடிப்பு வீடியோவை இலவசமாகப் பாருங்கள் என்று தனது இஸ்டாகிராமில் ஸ்டோரியாக வைத்திருந்தார். அத்துடன் நிறுத்தாமல் வெளியாகியிருந்த ஆவணப்படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் 20 வினாடிக்கு மேலாக வைக்கப்பட்டிருந்தது.
இவற்றை பொறுமையாக பார்த்து கொண்டிருந்த தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், அனுமதியின்றி நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகளை பயன்படுத்தியதாக நயன்தாராவுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்கள்.
அந்த மனுவில் எதிர் மனுதாரராக நயன்தாரா- விக்னேஷ் சிவன் மற்றும் நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
பின்பு வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி கொடுத்ததோடு, எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
வெளியான அப்டேட்
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்பு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அவர், வொண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் நெட்ஃபிளிக்ஸின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இப்படி ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டிருக்கும் பொழுது நயன்தாரா நெட்பிளிக்ஸ் புகைப்படத்துடன் ஒரு அப்டேட் இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், இதற்கு என்னென்ன சர்ச்சைகள் கிளம்பும் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |