பாடச் சென்ற இடத்தில் நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்திய சிவாங்கி
பாடச் சென்ற இடத்தில் ஆடி ரசிகர்களை தெறிக்கவிட்ட சிவாங்கியின் காணொளி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சிவாங்கி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.
இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார்.
போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய காந்தக்குரலால் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டவர் சிவாங்கி.
பாடகியாக இருந்த சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவராக மாறி விட்டார்.
இதனை தொடர்ந்து, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சிவாங்கி கோமாளியாக இருந்து சமைக்கவே தொடங்கிவிட்டார்.
தமன்னாவை மிஞ்சிய நடனம்
இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதுடன், ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார்.
அந்த வகையில், லண்டனில் பாடச் சென்ற சிவாங்கி காவாலா பாடலுக்கு தமன்னாவை மிஞ்சி ஆடிய காணொளியை பகிர்ந்துள்ளார்.
சிவாங்கி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளியை வைரலாக்கி வருகிறார்கள். நாளுக்கு நாள் திறமைகளை வெளிகாட்டுவதில் சிவாங்கி பலத்த ஆர்வமாக இருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |