நயன்தாராவின் அடுத்த படத்திற்கான படம்பிடிப்பு ஆரம்பம்: வைரலாகும் புகைப்படங்கள்
திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார்.
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம், வசூலில் 1000 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் தனது இரண்டாவது ஹிந்தி படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த படம்
இதற்கிடையில் தமிழிலும் நயன்தாரா பல படங்களில் நடித்து வருகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'மன்னாங்கட்டி சின்ஸ் 1960' படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் இது குறித்த தகவல்கள் கசிந்து வருகின்றது.
பிரபல யூடியூபர் டியூட் விக்கி இயக்கிவரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் ஆரம்பமாகியுள்ளதாக தெரியவருகின்றது.
மன்னாங்கட்டி சின்ஸ் 1960' படத்தில் நயன்தாரா, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உட்பட பலரும் ஒப்பந்தமாகியுள்ளனர். சான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என தெரியவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |