41 வயதிலும் இளமை மாறாத நயன்தாரா.. வெள்ளை சேலையில் அசத்தல் லுக்!
nayanthara new look: நடிகை நயன்தாரா வெள்ளை நிற சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து அதற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
வழக்கம்போல் தனது அழகாலும் ஸ்டைலாலும் ரசிகர்களை கவர்ந்துள்ள நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் வெளியான வேகத்திலேயே லைக்குகளை அள்ளி வருகின்றன.

நயன்தாரா
‘லேடி சூப்பர்ஸ்டார்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா, இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறார்.
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக வெற்றிகரமாக பயணித்து வரும் அவர், இன்றும் இளம் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் தனது நடிப்புத் திறமையை நிரூபித்த நயன்தாரா, தற்போது பாலிவுட்டிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான நயன்தாரா, முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தார்.

உலகளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த அந்த திரைப்படம், நயன்தாராவின் பாலிவுட் பயணத்திற்கும் வலுவான தொடக்கமாக அமைந்தது.
தனது நீண்டகால காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா, தற்போது குடும்ப வாழ்க்கையையும் திரைப்பயணத்தையும் அழகாக சமநிலைப்படுத்தி வருகிறார்.

வாடகைத் தாய் முறையின் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களான இந்த தம்பதியினர், அவ்வப்போது தங்களது குடும்ப புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
திரைப்படப் பணிகளில் பிஸியாக இருந்தாலும், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் செலவிடும் நேரத்திற்கு நயன்தாரா எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

இந்த நிலையில், 41 வயதிலும் தனது இளமைத் தோற்றத்தையும் அழகையும் கம்பீரமான ஸ்டைலையும் தக்கவைத்துள்ள நயன்தாரா, சமீபத்திய புரமோஷன் நிகழ்வில் அணிந்திருந்த வெள்ளை நிற சேலையில் அசத்தலான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

குறித்த புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில வெளியிட்டுள்ள நிலையில், நயன்தாராவின் எளிமையான அதே நேரத்தில் கவர்ச்சியான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் Hi ஆகஸ்ட் 28, 2026 அன்று வெளியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |