சொன்ன வார்த்தையை காப்பாற்றாமல் விக்கி... வேட்டு வைத்த நெட்ஃபிளிக்ஸ்; அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் 9ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள பார்க் ஷெரட்டன் ஸ்டார் ஓட்டலில் பிரமாண்ட கண்ணாடி அரங்கில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார் நயன்தாரா.
இவர்களின் திருமண புகைப்படமும் இணையத்தில் வைரலாகின. இதனிடையே ஏற்கனவே திருமணத்தின் வீடியோ கவரேஜ் உரிமையை 25 கோடி ரூபாய் கொடுத்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது.
இதனால் திருமணத்திற்கு வருபவர்கள் கேமரா கொண்டு வரக்கூடாது, மொபைல் போன் கொண்டு வரக்கூடாது, திருமண அரங்கத்திற்குள் போட்டோ எடுக்கக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

லீக் செய்த விக்கி
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் செய்த ஒரு காரியத்தால் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் செம கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்தை ஸ்ட்ரீம் செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதனை காண ரசிகர்களும் ஆர்வமாக இருந்தனர்.
ஆனால், திருமணம் ஆகி ஒரு மாதம் ஆனதை முன்னிட்டு விக்னேஷ் சிவன் திருமண விழாவின் சில போட்டோக்களை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்தார்.

உரிமம் ரத்து
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் உரிமையை விக்கி மீறி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
இதனால் கோபத்தில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண ஒப்பந்த வீடியோவை ஒளிப்பரப்ப மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.