கமலை போல் ஒரு வொர்ஸ்ட் கேரக்டர நான் பார்த்ததேயில்ல.. தாடி பாலாஜி மனைவி பகீர் குற்றச்சாட்டு
நடிகர் கமல்ஹாசனை பற்றி மோசமாக விமர்ச்சித்து பாலாஜி மனைவி கூறியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகர் தாடி பாலாஜி பல நடங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் தாடி பாலாஜி. இதில் இறுதி வரை சென்றார் தாடி பாலாஜி.
அப்போது தாடி பாலாஜியின் மனைவியான நித்யாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்திருந்த நிலையில் அவர்களை சேர்த்து வைக்கும் நோக்கத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரையும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தனர்.
கமலை திட்டிய நித்தியா
இதனிடையே, பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் தாடி பாலாஜி. தாடி பாலாஜி மனைவி நித்யாவுடன் வசிக்கும் தனது மகளை தன்னிடம் மீட்டுத் தரும்படி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு அளித்தார்.
அதற்கு, பேசிய நித்யா, நான் கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறேன். என் தரப்பு நியாயத்தை நான் சிங்கம் போல் கூறிவிட்டேன் என்றார்.
பின்னர், கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனியாக அறிவுரை வழங்கியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, அவரை பற்றி பேச விட்டுவிடாதீர்கள்.
அவர் பற்றி என்னிடம் நிறைய கன்டென்ட் உள்ளது. மேலும், அவரை போன்று ஒரு வொர்ஸ்ட் கேரக்டரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததேயில்லை என கூறியுள்ளார்.
இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் குறித்து தாடி பாலாஜியின் மனைவி நித்யா இப்படி கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.