60 அடி அம்மன் கட் அவுட்… இன்ஸ்டாகிராமில் ஹொட் லுக்கில் நயன்தாரா!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை நயன்தாரா, தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்பத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் கதாநாயகியாக வெற்றிகரமாக பயணித்து வரும் அவர், இன்றும் இளம் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் தனது திறமையை நிரூபித்த நயன்தாரா, தற்போது பாலிவுட்டிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான அவர், தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.
உலகளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த அந்த திரைப்படம், நயன்தாராவின் பாலிவுட் பயணத்திற்கும் வலுவான தொடக்கமாக அமைந்தது.

தனது நீண்டகால காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா, தற்போது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் வெற்றிகரமான திரைப்பயணத்தையும் சமநிலையுடன் முன்னெடுத்து வருகிறார். வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார்.
திருமணத்தின் பின்னம் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நயன்தாராவுக்கு என்றும் குறையாத ரசிகர்களின் ஆதரவு காணப்படுகின்றது.

இறுதியாக நயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘டாக்சிக்’ மற்றும் ‘ஹாய்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைபெற்ற நிலையில் தற்போது சுத்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைக்கு வரவுள்ளது.

திரைப்படத்தின் விளம்பரத்திற்காக நயனுக்கு 60 அடிக்கு அம்மன் கெட்டப்பில் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டுள்ள நிலையில், நயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செம ஹொட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |