சிக்கலில் நயன்தாராவின் தோழிகள்! சூடுப்பிடிக்கும் இரட்டை குழந்தை விவகாரம்
நடிகை நயன்தாரா குழந்தை விவகாரத்தில் அவருக்கு நெருக்கமான தோழிகள் உதவியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் - நயன் ஜோடி அறிவித்தை அடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றது.
நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொடுத்த வாடகை தாய் யார்? என்பதை அவரும், அவரது கணவரும் ரகசியமாக வைத்து இருக்கிறார்கள்.
அந்த ரகசியம் மெதுவாக கசிந்து இருக்கிறது.

சிக்கலில் நயன்தாராவின் தோழிகள்!
இந்நிலையில் நயன்தாராவுக்கு வாடகைத்தாயாக உதவியவர் கேரளாவை சேர்ந்த பெண் என்பது தெரியவந்த நிலையில் அதற்கு தோழிகள் தான் உதவி செய்திருப்பதாக கூறப்படுகின்றது.
நயன்தாரா கேரள மாநிலம் திருவல்லாவில் கல்லூரி படிப்பை படித்துள்ளார்.
அவரது கல்லூரி தோழிகள் சிலர் உதவியுடன்தான் வாடகைத்தாயை ஏற்பாடு செய்துள்ளார்கள் என்றும் அந்த பெண் நயன்தாராவின் பாதுகாப்பில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது நயன்தாரா மட்டும் இன்றி அவருக்கு உதவிய தோழிகளிடமும் விசாரணை இடம்பெற உள்ளதாம். நாளுக்கு நாள் நயன்தாராவின் குழந்தை விவகாரம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்வது புதிய கலாச்சாரமாக உருவெருத்திருந்தாலும், திருமணமான 4 மாதத்தில் இது தேவையா என்பதே பலரது கேள்வியாக உள்ளது.