நயன்தாரா படம் திரையில் வெளியிடுவதில் சிக்கல்! காரணம் என்ன?
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட திரையரங்க உரிமையளார்கள் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நயன்தாரா. நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் பட்டியலில் நயன்தாரா முதலிடத்தில் உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திரையரங்குகளில் வெளியிட சிரமம்
இந்நிலையில், நயன்தாரா கனெக்ட் என்ற ஹாரர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
முன்னதாக 2015ம் ஆண்டு இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் மாயா என்ற திகில் திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அஸ்வின் சரவணன் கனெக்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவத்தின் ரௌடி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படமானது வரும் 22ம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இப்படமானது 1 மணிநேரம் 39 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த படத்தில் இடைவேளை இல்லாம் காட்சிகள் இருக்கும் என்று கூறப்பட்டது. பொதுவாக திரையரங்களுகளில் ரசிகர்கள் இடைவேளைகள் இல்லாமல் பார்ப்பது கஷ்டம்.
இடைவேளை இல்லாமல் வெளியிட்டாலும் திரையரங்கு வியாபாரிகளுக்கு வருமானம் கிடைக்காது என்பதனால் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.