நயனை பிரிந்தாரா விக்னேஷ்? அன்னையர் தினத்தில் வெடித்த புதிய சர்ச்சை- கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
மே 10 அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளம் முழுக்கவே அன்னையர் தின வாழ்த்துகளைக் காண முடிந்தது.
திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய அம்மாவின் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
இதில் விக்னேஷ் சிவன் அவரின் அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
கடந்த வருடம் அன்னையர் தினத்திற்கு நயன்தாரா கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விக்னேஷ் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த வருடம் அம்மாவுக்கு மாத்திரம் வாழ்த்து கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் பிரிந்து விட்டார்களா என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார்கள்.
நயன்தாராவுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில் அவர் அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர்.
அன்னையர் தினம் முடிந்தும் விக்னேஷ் சிவன் மீது கோபமாக இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் தன் அம்மா, சகோதரியின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அதை பார்த்த ரசிகர்களோ, உங்கள் பிள்ளைகளுக்கு தாயாகப் போகும் நயன்தாராவின் புகைப்படத்தை ஏன் வெளியிடவில்லை என்று கூறி கோபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டு அவர் நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிடாதது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. நயன்தாராவை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.