பழனிமுருகன் கோவிலில் மகன்களுடன் அஷ்டாங்க நமஸ்காரம் செய்த நயன்தாரா- விக்கி
பழனிமுருகன் கோயிலில் மகன்களுடன்அஷ்டாங்க நமஸ்காரம் செய்த நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.
இவர், நடிப்பில் வெளியான டெஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். சினிமாவிற்கு வந்த பின்னர், அவருடைய பெயரை நயன்தாரா என மாற்றிக் கொண்டு தற்போது இந்துவாக மதம் மாறி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
திருமணத்திற்கு பின்னர், பல்வேறு கோவில்களுக்கு கணவருடன் சென்று தொடர்ந்து வழிபட்டு வருகிறார்.
திருமணத்திற்கு முன்பே ஏராளமான கோவில்களுக்கு சென்று வந்தாலும், தற்போது அடிக்கடி கோவில்களுக்கு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.
மகன்களுடன் பழனியில் நயன்தாரா
இந்த நிலையில் நயன்தாரா அவரது கணவர் மற்றும் குழந்தைகள் உடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று இருக்கிறார்.
அங்கு அவர்கள் உருக்கமாக வேண்டி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சிவப்பு ஆடையில் சென்ற நயன்தாரா அங்கிருந்தவர்களுக்கு மகன்களுடன் இணைந்து வணக்கம் கூறியிருந்தார். அத்துடன் விக்னேஷ் சிவன் அஷ்டாங்க நமஸ்காரம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “இன்னும் என்ன வேணும். இப்படி பிராத்தணை செய்கிறார்..” என நக்கலான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |