அன்னையர் தினததில் நடிகை நயன்தாராவின் உருக்கமான பதிவு! வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை நயன்தாரா அன்னையர் தினத்தில் உருக்கமான ஒரு நீண்ட பதிவுடன் தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான நடிகை நயன்தாரா தனது அதாத்திய நடிப்புத் திறமையால், தற்போது பாலிவுட் வரையில் கொடிக்கட்டி பறக்கின்றார்.

சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை தக்கவைத்து வருகின்றார்.

திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வரும் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார்.
ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் இவர் தென்னிந்திய நடிகைகளுள் உச்ச இடத்தை பிடித்துள்ளார்.

நடிப்பு மாத்திரமன்றி நயன்தாரா காஸ்மெடிக்ஸ் பிராண்ட் ஒன்றையும் சொந்தமாக நடத்தி வருகின்றார். அதுமட்டுமன்றி ரவுடி பிச்சர்ஸ் என தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகின்றார்.
சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதற்கும் தவறுவது கிடையாது.

இந்நிலையில், உங்களைப் பற்றிய மிக அழகான விஷயம், நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல... எங்கள் குழந்தைகளை உங்கள் பிரபஞ்சத்தின் மையமாக உணர வைத்ததுதான்.அந்த வகையான அன்பு அரிதானது மற்றும் மிகவும் ஆழமானது.. என பதிவிட்டு நடிகை நயன்தாரா அன்னையர் தினத்தில் வெளியிடடுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |