நடுக்கடலில் நடந்த புத்தாண்டு கொண்டாடும்.. நயன்தாராவுடன் இருக்கும் அந்த நடிகர்
பிரபல நடிகருடன் நடுக்கடலில் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாராவின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா
தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரமாக இருக்கும் நயன்தாரா ராக்காயி படத்தில் நடித்து வருகிறார்.
இவர், இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் மற்றும் அவரது குழந்தைகள் உடன் கடந்த ஒரு வாரத்திற்குள் மேலாக வெளிநாட்டு சுற்றுலாவில் இருக்கிறார்கள்.
இதன்படி, கிறிஸ்துமஸ் பண்டிகையை நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் பாரிஸ் நகரத்தில் குடும்பத்துடன் கொண்டாடி இருந்தார்கள்.
மாதவன் உடன் கொண்டாட்டம்
இந்த நிலையில் நடிகர் மாதவன் உடன் நயன்தாரா குடும்பத்தினர் புத்தாண்டு கொண்டாடியுள்ளனர்.
நடுக்கடலில் கப்பலில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் மற்றும் மாதவன் அவருடைய மனைவி இருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள், புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |