நள்ளிரவில் விக்கி கொடுத்த சர்ப்ரைஸ்: காதலருடன் நெருக்கமாக நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம்வரும் நயன்தாரா இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.
இவரது பிறந்தநாளுக்கு காதலர் விக்னேஷ் சிவன் நள்ளிரவில் வான வேக்கையுடன், கேக் வெட்டி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் தன்னுடைய காதலி நயன்தாரா பிறந்தநாளை செம்ம மாஸாக கொண்டாடி வரும், இந்த வருடம் கொண்டாட்டம் மிகவும் பிரம்மாண்டமாகவே இருந்துள்ளது.
திரைப்படங்களை மிஞ்சும் வகையில் வான வேடிக்கை நிகழ்வுகளுடன், தனது காதல் தேவதை நயன்தாராவிற்கு இரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நயன்தாரா மிகவும் எளிமையாயாக மஞ்சள் நிற டீ - ஷர்ட் மற்றும் டெனிம் ஸ்கர்ட் ஒன்றையும் அணிந்துள்ளார். விக்னேஷ் சிவன், வழக்கம் போல் கட்டி பிடித்து தன்னுனடய காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோக்களை பார்த்து, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அடுத்த ஆண்டாவது கணவன் மனைவியாக கொண்டாடுவார்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Pure love ?stay blessed Thalaivi#HBDLadySuperStarNayanthara #Nayanthara ❤️
— Nayanthara Trends (@TrendNayanthara) November 18, 2021
Birthday Bash pic.twitter.com/vqqqOGojgs
LadySuperstar Birthday Celebration with Crackers ????#HBDLadySuperstarNayanthara #Nayanthara pic.twitter.com/UQGcjzEZyr
— Karthik (@kalonkarthik) November 17, 2021
