த்ரிஷா vs நயன்தாரா இல்ல... தோழிகளாக மாறிய நடிகைகள்! படுவைரலாகும் புகைப்படங்கள்
நடிகை நயன்தாரா, நடிகை த்ரிஷைாவுடன் செம ட்ரெண்டிங்கான உடையில் கடலுக்கு நடுவில் எடுத்துக்கொண்ட அசத்தல் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில், நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு என்ற பாடல் வரிகளுடன் பகிர்ந்துள்ளார்.
குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளதுடன், லைக்குகளையும் குவித்து வருகின்றது.

த்ரிஷா - நயன்தாரா
சினிமாவின் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் தான் நடிகை த்ரிஷா மற்றும் ரயன்தாரா. இவர்கள் இருவரும் அப்போதும் இப்போதும் எப்போதும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இருந்துக் கொண்டிருப்பவரகள்.
மேலும், இவர்கள் இருவரும் தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக கதாநாயகிகளாகவே தங்களின் இருப்பபை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து பின்னர் சினிமா துறையில் கால் பதித்தவர் தான் நடிகை த்ரிஷா.
லேசா லேசா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அன்றிலிருந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாக இன்று வரை அந்த கதாநாயகி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார்.
சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை காப்பாற்றி வருகின்றார்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், நடிகை நயன்தாரா, நடிகை த்ரிஷைாவுடன் செம ட்ரெண்டிங்கான உடையில் கடலுக்கு நடுவில் எடுத்துக்கொண்ட அசத்தல் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பல வருடங்களுக்கு பின்னர் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளதால் இப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பை பெற்று வைரலாகி வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |