சினிமா தவிர நயன்தாரா எந்தெந்த தொழில்களில் முதலீடு செய்துள்ளார் தெரியுமா? பலரும் அரியாத உண்மை
நடிகை நயன்தாரா சினிமா தவிர மற்ற என்னென்ன தொழில்கள் செய்கின்றார் என்பது பலருக்கும் தெரியாத நிலையில், தற்போது அதுகுறித்த விபரத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னனி நடிகையாக இருக்கும், நடிகை நயன்தாரா ஒரு படத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறப்படுகின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் காதலரான விக்னேஷ் சிவனை கரம்பிடித்த நயன்தாரா வேலையிலும், தனிப்பட்ட வாழ்ககையிலும் பிஸியாக இருந்து வருகின்றார்.
திருமணம் முடிந்து தாய்லாந்து சென்று ஹனிமூன் கொண்டாடிய இந்த ஜோடி தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு சென்று தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். இதன் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.

ரெளடி பிக்சர்ஸ்
நடிகை நயன்தாரா, முதன்முதலில் முதலீடு செய்த தொழில் என்றால் அது சினிமா தான். இதில் ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து தொடங்கிய நயன்தாரா, அதன் மூலம் பல்வேறு இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.
இவர் தயாரிப்பில் இதுவரை நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் வெளியாகி உள்ளன. இதுதவிர கூழாங்கல், வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம், ஊர்க்குருவி போன்ற படங்கள் தற்போது தயாராகி வருகின்றன.
சாய் வாலே
சினிமாவுக்கு பின்னர் நயன்தாரா முதலீடு செய்த தொழில் என்றால் அது சாய் வாலே எனும் தேனீர் பிராண்ட். இந்த நிறுவனத்தில் அவர் ரூ.5 கோடி முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சாய் வாலே என்பது தென்னிந்தியாவில் நன்கு விற்பனையாகி வரும் டீ பிராண்ட் என்பதனால் இதன்மூலமும் நன்கு சம்பாதித்து வருகிறார் நயன்.

லிப் பாம்
நடிகை நயன்தாரா தனது தோழி ரெனிட்டா ராஜன் உடன் சேர்ந்து தொடங்கிய நிறுவனம் தான் லிப் பாம் கம்பெனி.
முழுமுழுக்க லிப் ஸ்டிக்கிற்காகவே பிரத்யேகமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் நயன்தாரா இருந்து வரும் நிலையில், இதிலும் நல்ல வருமானத்தை பார்த்து வருகின்றார்.
ஃபிபோலா
சமீபத்தில் நடிகை நயன்தாரா, ஃபிபோலா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டார்.
இறைச்சிகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக உள்ளது ஃபிபோலா, நடிகை நயன்தாராவும் அசைவப் பிரியர் என்பதால அவரையே இந்நிறுவனத்தின் விளம்பரங்களிலும் நடிக்க வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து எண்ணெய் பிசினஸில் முதலீடு செய்ய உள்ளதாகவும் இதற்காக 100 கோடி ஒதுக்கியு்ளளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
