ஒரு வழியாக திருமண தேதியை அறிவித்த நயன்தாரா- கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன்; கசிந்த தகவல்!
கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலர்களாகவே வலம் வரும் ஜோடி விக்னேஷ் சிவன் - நயன்தாரா. இவர்கள் வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் அடிப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது என்று தாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவது வழக்கம். இவர்கள் திருமணம் எப்போது தான் நடக்கும் என ரசிகர்களும் உறுதியாக தெரியாமல் புழம்பி வருகின்றனர்.
இதனிடையே, மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து நயன்தாரா கடவுள் மற்றும் ஜோசியத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்ததாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. அதைத்தொடர்ந்து ஜோசியர் என்ன சொன்னாலும் அதை தவறாமல் செய்து வருகிறாராம். அந்த வகையில், ஒரு ஜோசியர் விக்னேஷ் சிவனை விட உன்னை புரிந்து கொள்ளும் வேறு ஆண்மகன் கிடைக்கப்போவதில்லை என கூறியுள்ளார்.
இதனால், விக்னேஷ் சிவனை கணவராக மாற்றிக் கொள்ளலாம் என முடிவு செய்தாராம் நயன்தாரா. மேலும், நயன்தாராவின் வாழ்க்கையில் காதல் சர்ச்சைகளுக்கு ஒன்றும் பஞ்சமில்லை. ஒருவேளை ஜோசியக்காரர் மாற்றி கூறியிருந்தால் விக்னேஷ் சிவனை கழட்டி விட்டு போகவும் கொஞ்சம் கூட யோசித்திருக்கமாட்டார் நயன்தாரா.
இந்த நிலையில், இருவருக்கும் திருமணம் நடக்குமா? என பல வருடமாக கனவு கண்டுகொண்டிருந்த விக்னேஷ் சிவனுக்கு தற்போது அந்த கனவு பலிக்கும் நேரம் வந்துவிட்டதாம்.சமீபத்தில் நயன்தாரா ஒரு ஜோசியரிடம் தன்னுடைய கல்யாணத்துக்கான தேதியை கேட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதற்கு அவரும் மார்ச் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியை குறித்து கொடுத்து விட்டாராம்.
இந்த செய்தி விக்னேஷ் சிவனுக்கு செல்ல, கொண்டாட்டத்தில் உள்ளாராம்.
இந்த முறையாவது சொன்னபடி திருமணம் செய்வார்களா? இல்லை வயதாகும் வரை இப்படியே காதலை தொடர் கதை ஆக்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.