9 வருடங்களாக நயன்தாரா செல்போனில் இருக்கும் பொக்கிஷம்- அவரே பகிர்ந்த ரகசியம்
9 வருடங்களாக நயன்தாராவின் செல்போனில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் தான் நயன்தாரா.
இவர், கடந்த 2015ம் ஆண்டு வெளியான "நானும் ரவுடி தான்" திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. திருமணமான அடுத்த ஆண்டு அவர்களுக்கு வாடகை தாய் மூலம் உயிர் மற்றும் உலக் என்று இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.
சினிமாவில் பிஸியாக இருக்கும் அதே நேரம் தனது குடும்பத்திற்காகவும் அதிக நேரத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் செலவிட்டு வருகின்றனர்.
பொக்கிஷம் என்ன தெரியுமா?
இர்பான் போல் நடிகர் அஜித் செய்த விடயம்: அனைத்திற்கும் ஒரு அளவு உண்டு... வைரலாகும் மருத்துவரின் காணொளி
இந்த நிலையில், இரண்டு காதல் தோல்விகளை கண்டு என்னால் முடியாது என ஓய்ந்து போயிருக்கும் பொழுது நானும் ரௌடி தான் திரைப்படம் நயன்தாராவிற்கு புதியதொரு வாழ்க்கையை அடைத்து கொடுத்தது.
தற்போது லேடி சூப்பர்ஸ்டாராகவும், சிறந்த அம்மாவாகவும், கணவருக்கு நல்லதொரு மனைவியாகவும் இருக்கும் நயன்தாரா வாழ்வதற்கு இந்த திரைப்படம் அடித்தளம் போட்டுக் கொடுத்துள்ளது.
நேற்றுடன் நானும் ரௌடி தான் திரைப்படம் வெளியாகி 9 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. இதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா 9 வருடங்களாக அவர் செல்போனில் இருந்த பொக்கிஷங்களை மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |