நயன்தாராவின் முதல் படம் எது தெரியுமா? 18 வருடங்களுக்கு பின் உடைந்த உண்மை
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா.
இவர் மலையாளத்தில் 2003 ம் ஆண்டு ரிலீசான மனசினக்கரே என்ற படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஜெயராமிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தொட்டி ஜெயா படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க, துரை முதலில் தேர்வு செய்தது நயன்தாராவை தானாம்.
ஆனால் தனது முதல் தமிழ் படமான ஐயா படத்தின் வேலைகளில் நயன்தாரா பிஸியாக இருந்ததாலும், தொட்டி ஜெயா படம் தொடர்ந்து தள்ளி போனதாலும் அந்த படத்தில் நயன்தாரா நடிக்க முடியாமல் போனதாம்.
கிட்டதட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. நயன்தாராவை தன்னால் தமிழில் அறிமுகம் செய்ய முடியாமல் போனது தொடர்பாக கலைப்புலி தாணு வருத்தம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, கலைப்புலி எஸ்.தாணுவால் தமிழில் அறிமுகம் செய்ய முடியாமல் போன நயன்தாரா தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார்.
தற்போது நெற்றிக்கண், ரஜினியுடன் அண்ணாத்த, விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் பல படங்களையும் தயாரித்து வருகிறார்.
