குழந்தைகளுடன் தல தீபாவளிக் கொண்டாடும் நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழும் நயன்தாரா. தீபாவளி தினத்தையோட்டி தன்னுடைய இரட்டை குழந்தையுடன் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த ஜீன் மாதம் இயக்குநர் விக்னேஷ்சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
இரட்டை குழந்தை
திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இரட்டைக் குழந்தைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.
வாடகை தாயின் மூலம் குழந்தை பிறந்ததாக தெரியவந்த நிலையில், பரபரப்பு எழுந்தது. இதனை எந்தவிதமான சலனமின்றி பிரச்சினை முடிவிற்குக் கொண்டுவந்துள்ளார்.
வாழ்த்து
இந்நிலையில் இன்றைய தினம் குழந்தைகளுடன் தல தீபாவளி கொண்டாடும் நயன்தாரா, விக்னேஷ்சிவன் மற்றும் குழந்தைகளுடன் இணைந்த எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ ஒன்றையும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Wishing you all A very Happy Diwali ? #HappyThalaDiwali #HappyDiwali pic.twitter.com/UDL4yWesPg
— Nayanthara✨ (@NayantharaU) October 24, 2022
இந்த புகைப்படங்கள், வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.