துபாயில் கோலாகலமாக புத்தாண்டு கொண்டாடிய நயன்- விக்கி... குவியும் லைக்குகள்
நடிகை நயன்தாரா தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் துபாயில் சரவெடிகளுடன் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை நயன்தாரா
‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர், தனது நடிப்பு திறமையால் பாலிவுட் வரை சென்று விட்டார்.
சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை காப்பாற்றி வருகின்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளதுடன் வசூலையும் குவித்துள்ளது. இதன் பின்னர் இந்திய சினிமாவின் 10 கோடிக்கு மேல் சம்பளம் பெரும் நடிகையாக வலம் வருகின்றார்.
இவருடைய வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக, Nayanthara: Beyond the Fairy Tale எனும் ஆவணப்படம் கடந்த நவம்பர் 18 ஆம் திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர்.
சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது கணவனுக்கு நல்ல மனைவியாகவும் தனது இரண்டு மகன்களுக்கு நல்ல தயாகவும் அவர்களுடன் நேரம் செலவிடுவதற்கு தவறுவது கிடையாது.
இந்நிலையில் நயன்தாரா தனது காதல் கணவன் விக்னேஷ் சிவனுடன் துபாயில் வெகு விமர்சையாக புத்தாண்டை கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |