2026 நவராத்திரி : துர்கா தேவியின் அருளால் செல்வமும் செழிப்பும் பெறுப்போகும் 4 ராசிகள்!
இந்துக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் நவராத்திரியும் ஒன்றாகும். மகிஷாசுரன் என்ற அரக்கனுடன் துர்கா தேவி ஒன்பது நாட்கள் போரிட்டதை நினைவுகூரும் வகையில், இந்த ஒன்பது நாட்களும் தேவியின் வெவ்வேறு வடிவங்கள் வழிபடப்படுகின்றன.
புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கும் நவராத்திரி, இந்த ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி ஆரம்பமாகியது.

அக்டோபர் 19ஆம் தேதி மகா நவமி மற்றும் ஆயுத பூஜையும், அக்டோபர் 20ஆம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் நவராத்திரி தொடங்கும் கிழமையைப் பொறுத்து, துர்கா தேவி வரும் வாகனம் கணிக்கப்படுவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டு நவராத்திரி ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதால், தேவி யானை வாகனத்தில் வருவதாக நம்பப்படுகிறது. அம்மன் யானை வாகனத்தில் வருவது நன்மையின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.
அந்தவகையில், 2026 நவராத்திரியில் துர்கா தேவியின் அருளால் அதிர்ஷ்டமும் நற்பலன்களும் பெறவுள்ள ராசிகள் எவை என்பதை இப்போது பார்க்கலாம்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நவராத்திரி குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவற்றைப் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது.
புதிய வீடு அல்லது வாகனம் வாங்கத் திட்டமிட்டிருந்தால், வருமானம் மற்றும் சேமிப்புக்கு ஏற்ப முடிவெடுக்க இந்தக் காலம் உகந்ததாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நவராத்திரி பொருளாதார முன்னேற்றத்தைத் தரும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
தொழிலில் முன்னேறுவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் அதிகரிக்கலாம். செலவுகளைத் திட்டமிட்டு மேற்கொண்டால், நிதி நிலைமையைச் சிறப்பாக வைத்துக்கொள்ள முடியும்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நவராத்திரி நம்பிக்கையளிக்கும் காலமாக இருக்கும். நீண்ட காலமாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம்.
அதேபோல், தங்களின் திறமைகளை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகளும் அமையும். வெளிநாடு செல்ல முயற்சி செய்துகொண்டிருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் தேடிவரலாம்.இருப்பினும், செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டால் அதிக பணத்தைச் சேமிக்க முடியும்.
மீனம்

உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்!
மீன ராசிக்காரர்களுக்கு இந்த நவராத்திரி கடன் சுமையைக் குறைப்பது, செலவுகளைக் கட்டுப்படுத்துவது, புதிய நிதித் திட்டங்களை உருவாக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டிய காலமாக இருக்கும்.
திடீரெனப் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவசரமாகச் செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். எந்தவொரு நிதி முடிவையும் எடுப்பதற்கு முன்பு நிதானமாகச் சிந்தித்து, சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |