நவராத்திரி விரதத்தில் பலவீனம் இல்லாமல் இருக்கனுமா? இந்த பழங்களை எடுத்துக்கோங்க
நவராத்திரி விரதத்தின் போது சோர்வு இல்லாமல் முழு ஆற்றலுடன் சில பழங்களை உட்கொள்ளலாம். அவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
நவராத்ரி
நவராத்திரி நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், இந்த நேரத்தில் 9 நாட்கள் விரதம் இருந்து பக்தர்கள் தேவியை வணங்குவார்கள்.
இவ்வாறு விரதத்தின் போது பலவீனம் ஏறபடுகின்றது. இதன் போது நாம் சில பழங்களை உட்கொண்டால், நீரேற்றமாகவும், ஆற்றலுடனும் வைக்கின்றது.
இதே போன்று பழத்தினை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சினை நீக்குகின்றது. இந்த விரத நாட்களில் நம்மை ஆற்றலுடன் வைத்துக்கொள்ள சிலவகையான பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
ஆப்பிள்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆப்பிள் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். நார்ச்சத்து, ஊட்டச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை இதில் ஏராளமாக காணப்படுகின்றன.
இது தவிர, வைட்டமின் பி மற்றும் சி நிறைந்திருப்பதால், உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதை சாப்பிட்டால் நாள் முழுவதும் பசி இருக்காது.
வாழைப்பழம்:
விரதம் இருக்கும் காலத்தில் மிகவும் பிடித்தமான பழங்களில் இதுவும் ஒன்று. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், கார்போஹைட்ரேட் மற்றும் ஃபைபர் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன.
மேலும் இது போன்ற பல கூறுகள் இதில் காணப்படுகின்றன, அவை நாள் முழுவதும் உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. எனவே, விரதத்தின் போது கண்டிப்பாக வாழைப்பழத்தை உட்கொள்ளுங்கள்.
பப்பாளி:
பப்பாளி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கவும் இது நன்மை பயக்கும்.
இது மலச்சிக்கல் பிரச்சனையை போக்கவும் உதவுகிறது. எனவே, விரதத்தின் போது கண்டிப்பாக பப்பாளி சாப்பிடுங்கள்.
ஆரஞ்சு:
நவராத்திரி விரதத்தில் ஆரஞ்சையும் சேர்த்துக்கொள்ளலாம். இதை உட்கொள்வது உங்களுக்கு ஆற்றலைத் தருவது மட்டுமல்லாமல், அதில் உள்ள வைட்டமின் சி மன அழுத்தத்திலிருந்தும் உங்களைக் காப்பாற்றும். மேலும் இப்பழத்தில் ஜூஸ் செய்தும் குடிக்கலாம்.
தேங்காய் தண்ணீர்:
உண்ணாவிரதத்தின் போது தேங்காய் நீரைக் குடிப்பதால், நாள் முழுவதும் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதுடன், நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கும். எனவே, விரதத்தின் போது தேங்காய் நீரை கண்டிப்பாக குடியுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |