சந்திரன், சுக்கிரனால் பணவரவு பெறும் ராசிகள் யார்?
Navpancham Yog 3 Zodiac Lucky: சந்திரன், சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு இவற்றிற்கு காரணியாக இருக்கும் நிலையில், சுக்கிரன் அசுரர்களின் குருவாகவும் கருதப்படுகின்றார். மேலும் இவர் ரிஷபம், துலாம் ராசிகளுக்கு அதிபதியாக இருக்கின்றார்.
இதே போன்று சந்திரன் மனதின் காரணியாக இருக்கின்றார். கடக ராசிக்கு அதிபதியாக இருக்கின்றார். சந்திரன் நவம்பர் 14ம் தேதியான இன்று மகர ராசிக்குள் நுழைகின்றார்.

இதே நாளில் வக்ர நிலையில் சுக்கிரன் கன்னி ராசியில் அடைந்துள்ள நிலையில், இந்த இரு கிரகங்களின் நிலையினால் நவபஞ்சம யோகம் உருவாகியுள்ளது.
இந்த யோகத்தினால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசியினர்களின் வாழ்க்கையில் தாக்கம் ஏற்பட இருக்கும் நிலையில் குறிப்பாக மூன்று ராசியினர் நல்லதொரு அதிர்ஷ்டத்தையும், நிதி ஆதாயத்தினையும் பெறுகின்றனர். எந்தெந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த நவபஞ்சம யோகமானது நல்ல நிதி நன்மையை அளிப்பதுடன், நீண்ட காலமாக கைக்கு வராமல் இருந்த பணம் வந்து சேரும்.
பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் நல்ல லாபத்தினை பெறுவீர்கள். தொழிலை விரிவு படுத்தவும் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
பணியிடத்தில் பாராட்டை பெறுவதுடன், வாழ்க்கை துணையுடன் நல்ல நேரத்தையும் செலவிட வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான பழைய பிரச்சனைகளும் தீருமாம்.

மகரம்
மகர ராசியினருக்கு இந்த நவபஞ்சம யோகத்தில் சிறப்பான பலன் கிடைப்பதுடன், அதிகமான பணம் சம்பாதிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.
சிலருக்கு வருமானத்தில் ஆதாரம் கிடைப்பதுடன், வெளிநாட்டு தொடர்பாக வணிகம் நல்ல லாபத்தினை புதிய ஒப்பந்தத்தில் பெறுவீர்கள்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், மதிப்பு மரியாதையும் சமூகத்தில் அதிகமாகும். பரம்பரை சொத்துக்கள் மூலமாக நிதி ஆதாயம் கிடைக்கும்.

மீனம்
மீன ராசியினருக்கு இந்த நவபஞ்ச யோகத்தில் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைப்பதுடன் புதிய வாய்ப்பும் கிடைக்கும்.
தன்னம்பிக்கை அதிகமாக இருப்பதுடன், வேலையினை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பும் கிடைக்குமாம்.
நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன், ஏற்கனவே செய்துள்ள முதலீடுகளில் நல்ல லாபத்தினை பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |