குரு, புதன் சேர்க்கை: பிப்ரவரியில் ராஜ வாழ்க்கை வாழும் 3 ராசிகள் யார்?
குரு மற்றும் புதன் கிரகங்களின் சேர்க்கையினால் அதிர்ஷ்டத்தை சந்திக்கும் 3 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குரு புதன் சேர்க்கை
ஒரு ராசியில் ஓராண்டு காலம் நீடிக்கும் குரு பகவான் தற்போது மிதுன ராசியில் உள்ள நிலையில், ஜுன் மாதம் 2ம் தேதி வரை இருக்கின்றார்.
இதனால் மிதுன ராசியில் இருந்து கொண்டு சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றது. அந்த வகையில் பிப்ரவரி மாதம் குரு பகவான் புதனுடன் சேர்ந்து நவபஞ்சம யோகத்தினை உருவாக்குகின்றார்.
இதனால் பிப்ரவரி 17ஆம் தேதி குரு புதனுடன் சேர்ந்து இந்த நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கும் போது அதிரஷ்டத்தை பெறும் 3 ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

கடகம்
நவபஞ்ச யோகத்தில் கடக ராசியினரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
போட்டி தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் நல்ல செய்தி வருவதுடன், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். கடன் பிரச்சனை தீர்வதுடன், தேவையற்ற செலவுகள் குறைந்து, நிதி நிலைமையும் மேம்படும்.

கும்பம்
கும்ப ராசியினருக்கு இந்த நவபஞ்சம யோகத்தினால் சாதகமான பலன்கள் கிடைப்பதுடன், நீண்ட நாள் தடைபட்டுள்ள வேலையும் இந்த காலகட்டத்தில் முடிவடையும்.
ஆசைகள் அனைத்தும் கைகூடுவதுடன், எடுக்கும் காரியம் அனைத்தும் வெற்றியாகவே அமையும். புதிய வாய்ப்புகள், வெளிநாட்டு பயணம் போன்ற சூழல் ஏற்படும். ஆரோக்கியத்திலும் முன்னெற்றம் காணப்படும்.

மீனம்
மீன ராசியினர் இந்த ராஜயோகத்தினால் ஆடம்பரமாக இருப்பதுடன், புதிய வீடு, கார் வாங்கும் யோகம் உண்டாகும். கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைப்பதுடன், கூடுதல் வருமானத்திற்கும் வழிகள் கிடைக்கும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், குடும்பத்தில் பிரச்சனைகள் தீர்வதுடன், வணிக வியாபாரம் செய்பவர்கள் நல்ல பலனை பெறுவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |