குரங்கின் முக அமைப்பில் பூத்த விசித்திர பூ: இது எந்த இனம் தெரியுமா?
பொதுவாக இயற்கையில் காணப்படும் ஒவ்வொன்றும் பார்க்கும் பொழுது எமக்கு புத்துணர்ச்சி தரக்கூடியவையாக இருக்கும். அதில் முக்கிய இடத்தை பூக்கள் எடுத்து கொள்கின்றன.
இயற்கையில் காணப்படும் பூக்களின் மணம், அதன் அழகு, நிறம் உள்ளிட்ட விடயங்கள் கல்லையும் கரையச் செய்யும் என்பார்கள்.
இதன்படி, காலை எழுந்தவுடன் வீட்டு முற்றத்தில் இருந்து வெளியாகும் ரோஜா, மல்லி மலர்களின் வாசனையை சுவாசிக்கும் பொழுது மனதிற்கு அப்படியே இதமாக இருக்கும்.
ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு சிறப்புக்கள் இருக்கின்றன.
அந்த வகையில் அமைப்பால் விசித்திரமான பூக்களும் இயற்கையில் இருக்கின்றன. இதன் வடிவம், அமைவிடம், நிறம் இப்படி அனைத்திலும் வித்தியாசமாக இருக்கும்.
அந்த அடிப்படையில் எமது கண்ணில் பட்ட பூ தான் குரங்கு பூ.
குரங்கு பூ பற்றிய மேலதிக தகவல்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
குரங்கு பூ
குரங்கு பூ என அழைக்கப்படும் பூக்கள் ஆர்க்கிட் பெரிய குடும்பத்தை சார்ந்தவை. இதில் சுமாராக 26,000 இனங்கள் காணப்படுகின்றன.
ஆர்க்கிட் பூக்கள் என பார்க்கும் பொழுது அதன் சிறப்பே கண்கவர் வண்ணங்களும் வித்தியாசமான அமைப்புக்களும் தான்.
தென் அமெரிக்க நாடுகளான பெரு, ஈக்வடார் போன்ற இடங்களில் உள்ள காடுகளில் மட்டுமே இந்த குரங்கு பூக்கள் வளர்கின்றன.
“மங்கி ஆர்க்கிட்” என அழைக்கப்படும் இந்த பூக்கள் பார்ப்பதற்கு குரங்கின் முக அமைப்பில் இருக்கும்.
லூயர் எனும் தாவரவியல் அறிஞர் தான் இந்த வகை பூக்களுக்கு “மங்கி ஆர்கிட்” எனப் பெயர் சூட்டியுள்ளார். இந்த குரங்கு பூவில் சுமார் 120 வகைகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பார்ப்பதற்கு இளம் சிவப்பு, அடர் சிவப்பு, மஞ்சள் என்று வெவ்வேறு வண்ணங்களில் இவை காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |