சருமம் இயற்கையாகவே ஜொலிக்க வேண்டுமா? இந்த பழங்களை கட்டாயம் எடுத்துக்கோங்க
சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொண்டுவர, சில அற்புதமான பழங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தர்பூசணி
நீர்ச்சத்து அதிகம் நிறைந்த இந்த பழத்தினை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சருமத்திற்கு ஈரப்பதத்தினை புத்துணர்வையும் அளிக்கின்றது. மேலும் எண்ணெய் பசை சருமம் மற்றும் முகப்பரு பிரச்சனை உள்ளவர்களும் கட்டாயம் சாப்பிடவும்.
ஆரஞ்சு
வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த ஆரஞ்சு சருமத்தின் அழகை அள்ளிக் கொடுக்கின்றது. அதாவது சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதுடன், சரும அரிப்பு, வியர்வை போன்ற பிரச்சனைகளில் இருந்தும் காத்திடும்.
அவகேடோ
வைட்டமின்கள் (E, A, C, K, B6), நியாசின், ஃபோலேட் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த அவகேடா சருமத்தின் உள் அடுக்கிலிருந்து ஆருாக்கியமான வளர்ச்சியைத் தூண்டி, அழகை பன்மடங்கு மெருகேற்றுகின்றது.
எலுமிச்சை
எலுமிச்சையில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சத்தானது உடலின் நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை பாதுகாக்கின்றது. சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகச் செயல்படுகின்றதாம். இவை சரும அழகையும் மேம்படுத்துகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |