பூரான் கடித்தால் உடனே என்ன செய்யணும்? இந்த அற்புத உணவு பொருள் போதும்... எப்படிப்பட்ட விஷமும் முறிந்து விடும்!
கோடையில் விஷப்பூச்சிகள் தாக்கம் அதிகமாக இருக்கும். அதில் ஒன்றான பூரான் கடிக்கு என்ன மாதிரியான வீட்டு வைத்தியம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
பூரான் கடி. பெரும்பாலும் விஷத்தன்மையற்றது. என்றாலும் உபாதை மிக அதிகமாக இருக்கும்.
பூரான் கடி குழந்தைகளுக்கு ஒவ்வாமை உண்டாக்கும். சமயங்களில் அது இதயத்தை கூட பாதிக்க செய்யும். பெரியவர்களுக்கு பூரான் கடி ஏற்பட்டால் உடல் முழுவதும் தடிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் பிரச்சனை உண்டாகும்.
- பூரான் கடிக்கு குப்பைமேனி
- குப்பை மேனி இலை - கைப்பிடி
- கல் உப்பு - கால் கைப்பிடி
- மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
குப்பைமேனி இலையை கொண்டு வந்து சுத்தம் செய்து கல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நசுக்கி விழுதாக அரைக்கவும்.
குழந்தையின் சிறுநீர் சேர்த்து அரைத்து அதை உடல் முழுக்க பூசி எடுக்கவும்.
அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்கவும். தொடர்ந்து 3 நாட்கள் வரை செய்து வந்தால் பூரான் விஷம் முறிந்து தடிப்புகள் மறைய கூடும்.
குறிப்பு
பூரான் கடி குழந்தைகளுக்கு சமயங்களில் இதயத்தை பாதிக்க செய்யும். அதனால் கை வைத்தியம் தற்காலிகமாக செய்து முடித்ததும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
குழந்தைகள் என்றால் தொடர்ந்து 6 மணி நேரம் மருத்துவ கண்காணிப்பு அவசியம்.
பெரியவர்கள் என்றால் 2 மணி நேரமாவது மருத்துவரின் கண்காணிப்பு அவசியம்.